அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் எஸ்யு அருண்குமார் இயக்கியுள்ள 'வீர தீர சூரன் 2' படத்தின் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலும் பிரிமியர் உள்ளிட்ட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.
இப்படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற பி4யு என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் கடைசி நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பெற்ற தடைதான் இதற்குக் காரணம். இப்படத்தில் முதலீடு செய்திருந்த அந்த நிறுவனம் ஓடிடி உரிமையை தன் வசம் வைத்துள்ளது. ஓடிடி விற்பனை நடைபெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டதால் தங்களால் ஓடிடி உரிமையை விற்க முடியவில்லை, அதற்கான நஷ்ட ஈட்டைத் தயாரிப்பாளர் தர வேண்டும் என அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து நேற்று இரவு வரை தயாரிப்பாளர் சங்கம் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. காலையில் தடையை விலக்கும் விதத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 10.30 மணி வரை நீதிமன்றத் தடை இருக்கிறது. அதன்பின் 11 மணிக்கு மேல் படம் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தமிழ்ப் படங்கள் பலவற்றிற்கும் இப்படி கடைசி நேரத்தில் சிலர் தடை பெறுவது வாடிக்கையாக இருக்கிறது. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் நேற்று ஆவேசமாகப் பேசியுள்ளார்கள். பேச்சுவார்த்தைக்கு வராமல் நீதிமன்றம் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.