விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! |
கேஜிஎப் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்தியா முழுக்க பிரபலமானார் நடிகர் யஷ். தற்போது மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தனது 19வது படமாக 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். யஷ்ஷிற்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் கதாநாயகியாக கியாரா அத்வானி, ஹூமா குரேஷி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கி வருகின்றனர். பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது அடுத்தாண்டு, 2026 மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.