ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் |
மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் படம் ‛எம்புரான்'. காரணம் நடிகர் பிரித்விராஜ் ‛லூசிபர்' படத்தில் மோகன்லாலை வைத்து தான் முதன்முறையாக வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இந்த எம்புரான் ஐந்து வருடங்கள் கழித்து வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தின் வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்திற்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்று எம்புரான் படம் வெளியாவதை தொடர்ந்து அன்றைய தினம் தங்களது கல்லூரிக்கு விடுமுறை அளித்துள்ளது. அது மட்டுமல்ல கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் என காலை 7 மணிக்கு பெங்களூருவில் ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒய்ஜிஆர் மாலில் மூவி டைம் சினிமாஸ் திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிட்டு காட்டுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்லூரி நிர்வாகமே வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் கல்லூரியின் எம்டி மோகன்லாலின் தீவிர ரசிகராம். அதையும் குறிப்பிட்டு, அதனால் எம்புரான் படத்தை கொண்டாடுவோம் என்று சொல்லியே இந்த அறிவிப்பை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு இங்கே தமிழகத்தில் ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டும் தான் இப்படி, அதுவும் கூட சில அலுவலகங்களில் விடுமுறை விடப்படுவது உண்டு. அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு இலவசமாக டிக்கெட்டும் கூட வாங்கி கொடுப்பார்கள். ஆனால் ஒரு கல்லூரி, அதிலும் பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்று மலையாள நடிகர் ஒருவரின் படத்திற்காக விடுமுறை அளிப்பது ஆச்சர்யமானது என்பதுடன் இதுதான் முதல் முறை என்றும் சொல்லலாம்..