ரீல்ஸ் பிரபலங்கள், ரியலில் திணறுகிறார்கள் : வடிவுக்கரசி ஆதங்கம் | ஜன.,9ல் ரிலீசாகிறது 'ஜனநாயகன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முன்பதிவில் மட்டுமே 58 கோடி வசூலித்த 'எல் 2 எம்புரான்' | கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது | பிரபாஸிற்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி? | ''இந்த மாதிரி படம் எடுங்க.. ஜெயிக்கலாம்'': வெற்றி சூத்திரம் சொன்ன பாக்யராஜ் | 'குபேரா' இயக்குவதில் பெருமை : சேகர் கம்முலா | என் ஹார்ட் டிஸ்கை தாங்க.... : பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம் | விஜய்யின் 'ஜனநாயகன்' : முக்கிய அறிவிப்பு |
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்தி, துறை சார்ந்த ஞானத்தோடு, சமூக மாற்றக் கருத்துக்களை எடுத்துரைக்கும் பிரமாண்ட படைப்புகளைத் தருவதில் வல்லவர்தான் இயக்குநர் ஷங்கர். புதுமை விரும்பியான இவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களுமே பிரமாண்டத்தின் உச்சம் தொட்டவை. 50 மில்லியனில் ஆரம்பித்த இவரது கலைப் படைப்புகள் இன்று 2 பில்லியன்களுக்கும் மேல் சென்று படமெடுக்கும் அளவிற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் அன்றாடம் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டு அதோடு பயணித்து, அதை துள்ளியமாக தனது படைப்புகளில் பயன்படுத்தி வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்டிப்பிடித்துவிடுவதுதான் இவரது சாமர்த்தியம். அவ்வாறு இவர் இயக்கிய பிரமாண்ட படைப்புகளில் ஒன்றுதான் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த “முதல்வன்” திரைப்படம்.
ரஜினிகாந்தை நாயகனாக மனதில் நினைத்து எழுதப்பட்டதுதான் “முதல்வன்” படத்தின் கதாநாயகன் கதாபாத்திரம். ரஜினி நடிக்க மறுப்பு தெரிவிக்க, பின் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யை இயக்குநர் ஷங்கர் பரிசீலிக்க, அவரும் நடிக்க இயலாமல் போக, பின் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனை அணுக, அவரும் அந்த நேரத்தில் “ஹே ராம்” படத்தில் பிஸியாக இருந்ததை அறிந்து, தனது முதல் படமான “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் நாயகனான 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரும் படத்திற்கான மொத்த கால்ஷீட்களையும் வழங்கி நாயகனாக ஒப்பந்தமானார்.
மேலும் படத்தின் நாயகியாக நடிகை மீனாவை நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் நினைத்திருக்க, அதே நேரத்தில் “ரிதம்” என்ற படத்தில் நடிகர் அர்ஜுனுடன் ஜோடியாக மீனா நடித்திருந்ததால் அந்த எண்ணத்தையும் கைவிட்டு, தனது “இந்தியன்” திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த நடிகை மனீஷா கொய்ராலாவை நாயகியாக்கினார் இயக்குநர் ஷங்கர். இத்தனை மாற்றங்களுக்குப் பின் 1999 தீபாவளி வெளியீடாக வந்த இத்திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக வந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்றதோடு, நடிகர் அர்ஜுனின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் திரைப்படமாகவும் இன்றும் நிலைத்து நிற்கின்றது.