மாமன் பட டிரைலர் : ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஏற்பட்ட பயம் | பாலிவுட்டில் கூடுதல் கவனம் செலுத்தும் ஸ்ரீலீலா | ஆபரேஷன் சிந்தூர் - பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண் | கவுதம் மேனன் இயக்கத்தில் சந்தானம்? | ரெட்ரோ படத்திற்கு பின் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் பற்றிய அப்டேட் | படக்குழுவுக்கு இரண்டாவது முறையாக பிரேக் கொடுத்த ராஜமவுலி | தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்? : சமந்தா வெளியிட்ட தகவல | 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா | மும்பையில் அமீர்கானை சந்தித்த அல்லு அர்ஜுன் | 'ஆபரேஷன் சிந்தூர்' : சினிமா பிரபலங்கள் வாழ்த்தும், பாராட்டும் |
பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து, இயக்கும் படம் 'எல் 2 எம்புரான்'. இதில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த மாதம் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. மலையாளத் திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்திற்கு ஏற்பட்ட கடைசிகட்ட சிக்கல் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டு வெளியீடு உறுதி செய்யப்பட்டது. படத்தை உலக அளவில் கொண்டு போய் சேர்க்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
'ஐமேக்ஸ்' வடிவிலும் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இது குறித்து மோகன்லால், “மலையாளத் திரையுலகத்திலிருந்து ஐமேக்ஸில் வெளியாகும் முதல் படமாக 'எல் 2 எம்புரான்' இருக்கும் என்பதை அறிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த பெருமை. ஐமேக்ஸுக்கும் மலையாள சினிமாவுக்கும் இடையிலான நீண்ட மற்றும் சிறப்பான இணைப்பின் தொடக்கமாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 27 மார்ச் 2025ம் தேதி முதல் உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐமேக்ஸ் தியேட்டர்களில் இந்த அற்புதக் காட்சியைப் பாருங்கள்,” என்று குறிப்பிட்டுளளார்.