அதர்ஸ் ஓடவில்லை, ஆரோமலே வெற்றி பெறவில்லை.. மற்ற படங்கள் படுதோல்வி | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | ''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் | சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகிறது. அதையடுத்து இம்மாத இறுதியில் டிரைலர் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு நடித்திருந்த நிலையில், இப்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது குறித்த தகவலை இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.