ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் |
கமல்ஹாசனும், இயக்குனர் ஆர்.சி.சக்தியும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு நடன கலைஞரை பற்றி படம் எடுக்க விரும்பினர். இதற்காக ஆர்.சி.சக்தி திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தார். கமல்ஹாசன் நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் தெலுங்கு இயக்குனரான கே.விஸ்வநாத் இதுபோன்ற ஒரு கதையுடன் கமல்ஹாசனை சந்தித்தார். இந்த கதை கமலுக்கு பிடித்துவிடவே ஒப்புக் கொண்டார். படத்திற்கு முதலில் 'அனுபல்லவி' என்று பெயரிட்டனர்.
கமல்ஹாசன் அடிப்படையில் நடன கலைஞர் என்றாலும் இந்த படத்திற்காக அவர் கதகளி, குச்சுபுடி, பரதநாட்டியம், ஆகியவற்றை முறைப்படி ஆட வேண்டும். இதனால் கமல்ஹாசன் மற்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கோபி கிருஷ்ணா மாஸ்டரிடம் ஒரு மாதம் கடுமையான நடன பயிற்சி பெற்றார்.
பின்னர் படத்தின் தலைப்பு குறித்து விவாதித்தனர். படம் நாட்டிய கலையை பின்னணியாக கொண்டது. 'அனுபல்லவி' என்பது ராகத்தின் பெயர், அதனால் நாட்டியத்தோடு தொடர்புடைய பெயரை வைக்க முடிவு செய்தனர். அதன்படி 'சலங்கை ஒலி' என்ற பெயர் முடிவானது. 'சாகர சங்கமம்' என்று தெலுங்கு, மற்றும் மலையாள பதிப்புக்கு டைட்டில் வைக்கப்பட்டது.
கமலின் நடன திறமை, ஜெயபிரதாவின் நடிப்பு, இளையராஜவின் இசை அனைத்தும் படத்தை காவியம் ஆக்கியது. 3 மொழிகளிலும் இளையராஜாவின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. மூன்று மொழிகளிலும் படம் வெள்ளி விழா கொண்டாடியது.