அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் |
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது 1947ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியான படம் நாம் இருவர். இந்த படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் தயாரித்து, இயக்கினார். இவர் இயக்கிய கடைசி படமும் இதுதான். இந்த படத்தின் பெரிய வெற்றியால் தனது ஸ்டூடியோவை காரைக்குடியில் இருந்து சென்னைக்கு மாற்றினார்.
இந்திய சுதந்திரம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நேரத்தில் நாட்டுப்பற்று உணர்ச்சிமிக்க கதையைத் தேடிக்கொண்டிருந்தார் மெய்யப்ப செட்டியார். என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவினர் நடத்தி வந்த 'தியாக உள்ளம்' என்ற நாடகம் அவரின் கவனத்தைக் கவர்ந்தது. எனவே அந்த நாடகத்தின் உரிமையை வாங்கி 'நாம் இருவர் ' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்தார். நாடகத்தில் நாயகனாக நாடகத்தில் நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தையே படத்திலும் நாயகனாக்க ஒப்பந்தம் செய்தார்.
அந்த நேரத்தில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிக்கியிருந்ததால் அவரின் நாடகக்குழுவை ஏற்று நடத்தும் முழு பொறுப்பும் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் தோளில் விழுந்தது. இதனால் நாம் இருவர் படத்தில் அவர் நடிக்க இயலவில்லை. நிலமையை உணர்ந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார், டி.ஆர்.மகாலிங்கத்தை படத்தில் நாயகனாக்கினார். நாயகியாக டி.ஏ.ஜெயலட்சுமி நடித்தார்.
இவர்களுடன் பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி பேபி கமலா, டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆர்.சுதர்சன் இசை அமதை்து இருந்தார் . தேசபக்தி மிகுந்த பாரதியாரின் பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றது.
பெரும் பணக்காரர் ஒருவரின் மகன் திரைப்பட தயாரிப்பில் இறங்கி பெரும் கடனில் சிக்கி பின்பு அதிலிருந்து மீண்டு கடைசியில் காந்தியவாதி ஆவது மாதிரியான கதை. பாரதியார் விழாவுடன் தொடங்கும் படம் காந்தியின் பிறந்த நாளுடன் முடியும், பாரதியாரின் எழுச்சி மிகுந்த பாடல்கள், தேசப்பற்று மிக்க உரையாடல்கள் மூலம் சுதந்ததிரமடைவதற்கு முன்பே சுதந்திரத்தை கொண்டாடிய படம்.