இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
கடந்த 2004ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், பிரகாஷ் ராஜ், நதியா, அசின் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. இப்படம் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு இன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் மோகன் ராஜா அவரது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதன்படி, "இளைஞர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். ரீரிலீஸ் என்கிற டிரெண்ட் நீங்கள் தான் உருவாக்கினீர்கள். ஒரு சின்ன மாற்றத்திற்காக எம்.குமரன் S/O மகாலட்சுமி படத்தின் ரீ ரிலீஸை உங்கள் அம்மாவோடும் குடும்பத்தோடும் பாருங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கொண்டாடிய படத்தின் தியேட்டர் அனுபவத்தை அவர்களுக்கு மீண்டும் கொடுங்கள்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.