பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குட் பேட் அக்லி'. இப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. அஜித்தின் முந்தைய படமான 'விடாமுயற்சி' தோல்வியடைந்ததால் இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகி உள்ளது. “ஒரு தாதா அவருடைய வன்முறை வாழ்க்கையிலிருந்து விலகி, தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ முயற்சிக்கிறார். ஆனால், கடந்த காலத்தில் அவர் செய்த மிருகத்தனமான செயல்கள் அவரைப் பின் தொடர்கின்றன. அவற்றை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராகிறார்,” என்பதுதான் அந்த கதைச் சுருக்கம்.
அதைப் பார்த்ததுமே அனைத்து ரசிகர்களுமே விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் கதையும் இதுதானே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பட வெளியீட்டிற்கு முன்பே இப்படி வரும் நெகட்டிக் கமெண்ட்களை படக்குழு எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
'குட் பேட் அக்லி' படம் அஜித்திற்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தே ஆக வேண்டும்.