60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் |
1980களில் பரவலாக பேசப்பட்ட பெயர் சிறுமுகை ரவி. 25 வருடங்களுக்கும் மேலாக நாடகத்துறையில் பழுத்த அனுபவம் கொண்டவர். 18 வயதிலிருந்தே மேடை நாடகங்கள் எழுதி, நடித்து, இயக்கியும் வந்தவர். இருநூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார் இவர். சொந்தமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார்.
மணிவண்ணன் இயக்கிய 'இளமை காலங்கள்' படத்தின் கதை இவர் எழுதியது. 'உறவுக்கு ஒருத்தி, மலர்களிலே அவள் மல்லிகை' படங்களுக்கு வசனம் எழுதினார். இவர் இயக்கிய முதல் படம் 'ராகங்கள் முடிவதில்லை'. தன்னை வலுக்கட்டாயமாக காதலித்து, திருமணம் செய்து கொண்டவனை அவன் மனைவியாகவே இருந்து கொண்டு பழிவாங்கும் நாயகியின் கதை. பிரபு அம்பிகா நடித்திருந்தார்கள். ஆனால் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் 'பூவே இளம் பூவே, அலை ஓசை, அசோக் நகர்' உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ஆனால் எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் சினிமாவில் இருந்து விலகினார். என்றாலும் கடைசி வரை சினிமாவிற்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். பலரை சினிமாவில் நடிகராக, இயக்குனராக ஆக்கியவர் இவர் என்று சொல்வார்கள்.