'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி | வசூலில் வெற்றி பெற்றதா டூரிஸ்ட் பேமிலி | ரெட்ரோ முதல் நாள் வசூல் முழு விவரம் | தங்களது படங்களை லண்டனில் பார்த்த சிம்ரன், பூஜா ஹெக்டே | 'ரெட்ரோ' படத்தில் இடம் பெற்ற 'செனோரீட்டா'.... இளையராஜாவின் பாடல் | நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது |
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி அதையடுத்து சல்மான்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அடுத்தபடியாக புஷ்பா 2 படத்தில் நடித்த அல்லு அர்ஜுனை வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போகிறார் அட்லி. மறு ஜென்மம் குறித்த கதையில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஐந்து நடிகைகள் நடிக்க போவதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ஜான்வி கபூர் உள்பட இரண்டு இந்திய நடிகைகள் நடிக்க, அமெரிக்கா மற்றும் கொரியா நாட்டைச் சேர்ந்த 3 சர்வதேச நடிகைகளும் நடிக்கிறார்களாம். அல்லு அர்ஜுன் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் இந்த படம் பான் இந்தியா கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.