'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
தெலுங்கு திரையுலகில் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் ஆக எதிர்பார்க்கப்படுவது, பிரபல நடிகரும் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்து வரும் ‛கண்ணப்பா' திரைப்படம் தான். சிவபக்தனான கண்ணப்பனை பற்றி கூறும் புராண படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இந்த படம் பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தை பான் இந்திய படமாக தயாரிக்க விரும்பிய விஷ்ணு மஞ்சு இதில் முக்கிய பிரபலங்களான பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால், தெலுங்கில் நடிகர் பிரபாஸ், கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டவர்களை அழைத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.
இதில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது கதாபாத்திர டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் விஷ்ணு மஞ்சு கலந்துரையாடிய போது, பிரபாஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக பணம் எதுவும் வாங்கவில்லை என்றும் இந்த படத்தின் கதையையும், கதாபாத்திரத்தையும் அவரிடம் கூறியபோது மறு வினாடியே இந்த படத்தில் நடிக்க மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு மஞ்சு.