இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
பொதுவாக பக்கா கமர்ஷியலாக உருவாகும் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடிப்பார்கள். ஆனால் ஒரு வலுவான கதையில் 5 ஹீரோயின்கள் நடிப்பது அபூர்வம். அப்படியான ஒரு படம் சிவாஜி நடித்த 'நீதிபதி'. இந்த படத்தில் சிவாஜியுடன் பிரபுவும் நடித்திருந்தார். ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்க கே.பாலாஜி தயாரித்திருந்தார். 'ஜஸ்டிஸ் சவுத்ரி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
சிவாஜி ஒரு நேர்மையான நீதிபதி அவர் ஒரு கடத்தல்காரனுக்கு சிறை தண்டனை அளித்து விடுவார். இதனால் நீதிபதியை பழிவாங்க நினைக்கும் வில்லன் அவர் மகளையே ஒரு குற்றவாளியாக்கி அவர் முன்னால் நிறுத்தி அவர் வாயாலேயே அவளுக்கும் தண்டனை வாங்கி தருவதும், பின்னர் அது தொடர்பான பிரச்னைகள் தீர்வதும்தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் சிவாஜியின் ஆஸ்தான நாயகிகளான கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோர் நடித்தனர். அவர்களோடு அன்று இளம் நடிகைகளாக இருந்த ராதிகா, மேனகா, சத்ய கலா ஆகியோரும் நடித்தனர். இவர்களோடு சில்க் ஸ்மிதாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். படத்திற்கு கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.