இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இந்த படத்தில் சமையற்கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், இந்தி நடிகை சுவேதா திரிபாதி நடித்தனர். சரவண ராஜேந்திரன் இயக்கினார், ராஜூ முருகன் கதை எழுதினார். வடநாட்டில் இருந்து சர்க்கஸ் நடத்த வந்த பெண்ணுக்கும், தமிழ் இளைஞருக்குமான காதலை சொன்ன படம். ஓரளவுக்கு இந்த படம் வரவேற்பை பெற்றது. சில விருதுகளையும் பெற்றது.
இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இயக்குனர் சரவண ராஜேந்திரன், தனது பெயரை ராஜு சரவணன், எற்று மாற்றிக் கொண்டு இந்த படத்தை இயக்குகிறார். மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக நடிக்கிறார். கடந்த டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இத்திரைப்படம் பாலக்கோடு , தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகளின் நிலப்பரப்புகளிலும் மற்றும் தர்மபுரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.