வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் |
தெலுங்கில் நானியின் நடிப்பில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது ‛தி பாரடைஸ்'. ஸ்ரீகாந்த் ஓட்டேலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. இந்த படம் தெலுங்கையும் தாண்டி தென்னிந்திய மொழிகள், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. அதேசமயம் தெலுங்கில் காட்சிகளை எடுத்துவிட்டு அப்படியே மொழிமாற்றம் செய்யாமல் அந்தந்த மொழிக்கு ஏற்றபடி காட்சிகளை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது.
அப்படி நேற்று வெளியான டீசரில் தண்ணீருக்குள் இருந்து வெளிவரும் நானியின் கையில் சில எழுத்துக்கள் டாட்டூவாக பொறிக்கப்பட்டுள்ளன. அது ஒருவரின் தாயைப் பற்றி கூறும் தவறான வார்த்தை. இந்த வார்த்தை தமிழிலும், மலையாள டீசரில் மலையாளத்திலும் என அந்தந்த மொழிக்கு ஏற்றபடி எழுதப்பட்டிருந்தது.
கதாநாயகனின் பிறப்பு குறித்து தவறாக பேசும் இந்த வார்த்தையை இப்படி அப்பட்டமாக வெளிப்படுத்தியதற்காக இந்த டீசரை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். டீசர் சென்சார் செய்யப்படாமல் வெளியானதால் நேரடியாகவே இந்த வார்த்தையை படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளார்கள் என்று தெரிகிறது.