கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் மிருணாள் தாகூர் | ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் : காதல், திரில்லர் படமாக உருவாகிறது | அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா தனுஷ்? | சர்ச்சையை கிளப்பிய நானியின் டாட்டூ வார்த்தை | கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர் | அய்யப்பனும் கோஷியும் இயக்குனரின் கனவு படத்தை நிறைவு செய்த பிரித்விராஜ் | கூலி பட டீசர் மார்ச் 14ல் வெளியாவதாக தகவல் | அமரன் படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் | ஐதராபாத்தில் சூர்யா 45வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு | கேங்கர்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு |
விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன்தாஸ், சுனில், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இதன்பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிவா, நித்திலன் சாமிநாதன், விஷ்ணுவர்தன் உள்ளிட்ட இயக்குனர்கள் அஜித்திடத்தில் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் அஜித்குமார் கார் ரேஸ் போட்டிகளை முடித்துவிட்டு வந்த பிறகுதான் அவரது அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது தெரியும் என்று அவரது வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இந்த நேரத்தில், பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், படங்களை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், அஜித்தின் அடுத்த படத்தை தயாரித்து இயக்குவதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் வரவேற்று கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.