மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக ஏழு ஆண்டுகள் வரை விளையாடிவர். அப்போது தெலுங்கு சினிமா பாடல்களுக்காக ரீல்ஸ்-களைப் போட்டு தெலுங்கு சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்.
அந்த அணியை விட்டு விலகிய பின்பும் தெலுங்கு சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. அவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தார்கள். இப்போது நிதின் நாயகனாக நடிக்கும் 'ராபின்ஹுட்' தெலுங்குப் படத்தில் டேவிட் வார்னர் அறிமுகமாக உள்ளார்.
அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிசங்கர் இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்க ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.
படத்தில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை டேவிட் வார்னர் பெற்றதாக டோலிவுட் தகவல். இந்தப் படம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது.