அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்? | அம்மா ஆகப் போகும் கியாரா அத்வானி : வாழ்த்திய சமந்தா, ராஷ்மிகா | நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது : அமிதாப்பச்சனின் பதிவால் பரபரப்பு! | கிரிப்டோ கரன்சி முறைகேடு குற்றச்சாட்டு : தமன்னா விளக்கம் | இர்பான் கான் நினைவாக தங்கள் கிராமத்திற்கு புதிய பெயர் சூட்டிய மக்கள் | கருப்பை வெள்ளையாக்க அதிக படங்களில் நடிக்கிறேனா? : டென்ஷனான வாரிசு நடிகர் | ராஜ்குமாரின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகும் அப்பு | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால், சீனிவாசன் கூட்டணி | தகராறை முடித்துக் கொண்ட கங்கனா ரணவத், ஜாவேத் அக்தர் | கெட்டிமேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை |
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எம்புரான்' திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது. அவரும் ஷோபனாவும் இணைந்து தருண் மூர்த்தி இயக்கத்தில் நடித்துள்ள 'தொடரும்' திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் 'ஹிருதயப்பூர்வம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். கேரளாவில் இதன் ஒரு கட்ட படப்பிடிப்பை முடித்த அவர் அடுத்ததாக டில்லிக்கு கிளம்பி சென்று மம்முட்டியுடன் தான் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பில் மோகன்லால், மம்முட்டி இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்' படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். பஹத் பாசில் நடித்த 'டேக் ஆப், சீ யூ சூன், மாலிக்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தான் இந்த படத்தில் மம்முட்டி, நயன்தாரா இருவரும் நடிக்கும் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.