சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடிகர்கள் மோகன்லால் - சீனிவாசன் இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வந்திருக்கின்றன. இதில் பல படங்களுக்கு சீனிவாசனே கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோகன்லாலும், சீனிவாசனும் இணைந்து நடித்த 'ஒரு நாள் வரும்' என்கிற திரைப்படம் கடந்த 2010ல் வெளியானது. அதன்பிறகு கடந்த 15 வருடங்களாக இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதனால் இணைந்து நடிக்கவில்லை என்றும் அதன்பிறகு சீனிவாசனின் உடல்நல குறைவு காரணமாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதாலும் இவர்கள் இணைந்து நடிக்க முடியாமல் போனது என்றும் சொல்லப்பட்டது. அதே சமயம் சீனிவாசன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை மோகன்லால் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் சீனிவாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த படத்தில் நடித்து வரும் பிரேமலு புகழ் நடிகர் சங்கீத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு மில்லியன் டாலர் புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சத்யன் அந்திக்காடு இயக்கத்திலேயே மோகன்லால்-சீனிவாசன் நடித்த நாடோடிக்காட்டு திரைப்படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.