ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரும், பிரபலமான ராஜ்குமார் குடும்பத்து வாரிசுகளில் ஒருவருமான நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த 2021ம் வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 46வது வயதிலேயே மரணம் அடைந்தார். இது கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் மார்ச் 14ம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புனீத் ராஜ்குமார் கன்னடத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான அப்பு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக அவரது மனைவி அஸ்வினி தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002ல் புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாக முடிவு செய்த போது கன்னடத்தில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் இருந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை அழைத்து வந்து அந்த படத்தை இயக்க வைத்தார்கள். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ரக்ஷிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக இதை தெலுங்கிலும் இடியட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பூரி ஜெகன்நாத். இந்த படம் தான் பின்னர் தமிழில் சிம்பு நடிக்க தம் என்கிற பெயரிலும் ரீமேக் ஆனது. இந்த மூன்று படங்களிலும் ரக்ஷிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.