ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள திரையுலகில் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தியான் சீனிவாசன். இவர் பிரபல சீனியர் நடிகரான சீனிவாசனின் மகன். இளம் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசனின் தம்பி. அது மட்டுமல்ல கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். ஆனால் தற்போது டைரக்ஷனை தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள ஆப் கைசே ஹோ என்கிற மலையாள படம் ஹிந்தி டைட்டிலுடன் நேற்று வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தியான் சீனிவாசனிடம் நிரூபர் ஒருவர் நீங்கள் இப்படி அதிக படங்களில் நடிப்பது உங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக தான் என்று சொல்லப்படுகிறதே என்று ஒரு கேள்வியை எழுப்பினார். இந்த கேள்வியால் கொஞ்சம் டென்ஷனான தியான சீனிவாசன் உங்களிடம் அது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் இருந்தால் தயவு செய்து கேள்வி கேளுங்கள் எரிச்சல் ஊட்டும் விதமாக கேள்விகளை கேட்காதீர்கள் என்று கூறினார்.
மேலும், “எனக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதற்காக நான் ஸ்கிரிப்ட்டுகளை படிக்க கூட தேவையில்லை. இதுபோன்று யாரிடமும் எரிச்சல் ஊட்டும் கேள்விகளை கேட்காததால் தான் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. பட வாய்ப்புகளை பெறுவதற்கு ஒழுக்கமாகவும் நாகரீகமாகவும் நடந்து கொண்டால் மட்டுமே போதும். நீங்கள் தற்போது செய்வது போல மற்றவர்களை இதுபோன்று எரிச்சல் ஊட்டாமல் இருந்தாலே போதும்” என்று கூறினார்.
எப்போதும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலகலப்பாக பேசும் தியான் சீனிவாசனையே இந்த அளவிற்கு கோபப்பட வைத்து விட்டார்களே என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.