சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கடந்த 2020ல் கொரோனா முதல் அலை தீவிரமானபோது அந்த சமயத்தில் பல திரையுலக பிரபலங்களின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்படி ஒருவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். பாலிவுட்டையும் தாண்டி நேசிக்கப்படும் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்த இவர் மறைந்து 5 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தினர் தங்களது ஊர் பெயரையே மாற்றி இர்பான் கானின் நினைவாக தங்கள் ஊருக்கு புதிய பெயரை சூட்டியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இகாத்புரி என்கிற நகருக்கு அருகில் உள்ள பட்ரியாச்சா வாடா என்கிற கிராமத்தினர் தற்போது தங்களது நகரத்திற்கு ஹிரோச்சி வாடி என்று பெயரை மாற்றி உள்ளனர். இதற்கு பக்கத்து வீட்டு ஹீரோ என்று அர்த்தம். அதாவது இர்பான் கான் தங்களில் ஒருவர் என சொலும் விதமாக இந்த பெயரை சூட்டியுள்ளனர்.
இர்பான் கான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த சமூக ஆர்வலராக இருந்தார். இந்த ஹிரோச்சி வாடி பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறார். அங்கே ஒரு பண்ணை வீடு வாங்கி வசித்த இர்பான் கான் அவர்களில் ஒருவராகவே தன்னை மாற்றிக்கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு இருக்கிறார். இதனாலேயே அவரை பெருமைப்படுத்தும் விதமாக தற்போது அந்த பகுதி மக்கள் தங்கள் கிராமத்தின் பெயரை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.