அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்? | அம்மா ஆகப் போகும் கியாரா அத்வானி : வாழ்த்திய சமந்தா, ராஷ்மிகா | நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது : அமிதாப்பச்சனின் பதிவால் பரபரப்பு! | கிரிப்டோ கரன்சி முறைகேடு குற்றச்சாட்டு : தமன்னா விளக்கம் | இர்பான் கான் நினைவாக தங்கள் கிராமத்திற்கு புதிய பெயர் சூட்டிய மக்கள் | கருப்பை வெள்ளையாக்க அதிக படங்களில் நடிக்கிறேனா? : டென்ஷனான வாரிசு நடிகர் | ராஜ்குமாரின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகும் அப்பு | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால், சீனிவாசன் கூட்டணி | தகராறை முடித்துக் கொண்ட கங்கனா ரணவத், ஜாவேத் அக்தர் | கெட்டிமேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை |
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், தற்போது எம்புரான் என்கிற பெயரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாகவே மலையாள திரையுலகில் தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் விதமாகவும் நடிகர்கள் மூலம் ஏற்படும் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடர இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அறிவிப்பு வெளியானது.
இதற்கு நடிகர் சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கங்களும் ஆதரவாக நிற்கின்றன. அதேசமயம் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். தயாரிப்பாளர்களில் ஒரு சிலரும் இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தை தயாரித்துள்ள ஆண்டனி பெரும்பாவூர் இப்படி தயாரிப்பாளர் சங்கம் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அவரது பதிவுக்கு ஆதரவாக நடிகர்களாக இருந்து தயாரிப்பாளர்களாகவும் மாறிய பிரித்விராஜ், உன்னி முகுந்தன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால் ஆண்டனி பெரும்பாவூர் தன்னுடைய தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான பதிவை நீக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. இந்த நிலையில் ஆண்டனி பெரும்பாவூருக்கு செக் வைக்க முடிவு செய்த தயாரிப்பாளர் சங்கம் வரும் மார்ச் 27ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தியை பரப்பியது.
இப்படி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் மற்ற சங்கங்கள் ஈடுபட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதில் ஒரு முக்கிய அமைப்பான கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரும் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள். அதன்படி அன்றைய தினம் திரையரங்குகளில் எந்த படமும் திரையிடப்பட மாட்டாது. சரியாக மார்ச் 27ம் தேதி இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்ததற்கு காரணமே மோகன்லால் படத்தை தடுக்க வேண்டும் என்பதை விட, அதன் தயாரிப்பாளராக இருக்கும் ஆண்டனி பெரும்பாவூர் தங்களது உத்தரவுக்கு அடி பணிய வைக்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் முனைப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென என தனது முகநூல் பக்கத்தில் தான் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்ப்பாக வெளியிட்டு இருந்த அந்த பதிவை தற்போது நீக்கியுள்ளார் ஆண்டனி பெரும்பாவூர். இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தினர் சமரசம் ஆகும் பட்சத்தில் எம்புரான் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.