இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மலையாள திரையுலகில் பிரபல சீனியர் நடிகரான சீனிவாசனின் மகனும், இளம் இயக்குனரும், நடிகருமான வினீத் சீனிவாசனின் தம்பியுமான தியான் சீனிவாசன் தானும் ஒரு நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமல்ல சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி நடித்த லவ் ஆக்ஷன் டிராமா என்கிற வெற்றி படத்தையும் இயக்கியவர். தொடர்ந்து படங்களில் நகைச்சுவை மிக்க கதாபாத்திரங்களில் கதாநாயகனாக மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இவர் நிஜத்திலும் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஏதாவது நகைச்சுவை கலாட்டாக்கள் பண்ணக்கூடியவர்.
அப்படி சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு கடையை திறந்து வைக்க அழைக்கப்பட்டிருந்தார் தியான் சீனிவாசன். இவர் ரிப்பன் வெட்டுவதை படம் எடுப்பதற்காக அங்கே நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனுக்கு அடியில் குனிந்தபடி சில போட்டோகிராபர்கள் முன்கூட்டி உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் நுழைவதை பார்த்து இவரும் ரிப்பனுக்கு அடியில் குனிந்து செல்ல முயற்சித்தார். உடனே அருகில் இருந்த நபர் அவரை தடுத்து நிறுத்தி, சார் நீங்கள் தான் ரிப்பனை வெட்ட வேண்டும். நீங்கள் எங்கே குனிந்து செல்கிறீர்கள் ? என்று கேட்க, ஓ அப்படியா என்று சிரித்தபடி அதன் பிறகு ரிப்பனை வெட்டினார் சீனிவாசன். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி உள்ளது.