லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமா உலகில் சீனியர் கதாநாயகியாக 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் த்ரிஷா. '96' படத்திற்குப் பிறகு அடுத்த ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் 'குட் பேட் அக்லி, தக் லைப்' படங்களிலும், தெலுங்கில் 'விஷ்வாம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கருத்தரங்கில் த்ரிஷா கலந்து கொண்டார். மேடையில் நடிகர் கமல்ஹாசனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் த்ரிஷா. அப்போது அவரிடம் கமல்ஹாசன் படங்கள் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த த்ரிஷா, “கமல் சார் படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். 300 படங்களுக்கு நெருக்கமாக நடித்துள்ளார். அவருடைய சில படங்களை 30, 40 முறை பார்த்துள்ளேன். 'மைக்கேல் மதன காமராஜன், நாயகன், தேவர் மகன்' ஆகிய படங்களை எனக்கு அன்றைய நாள் சிறப்பாக இருந்தாலோ, மோசமாக இருந்தாலோ பார்ப்பேன். 'விக்ரம்' படமும் பிடித்த படம். அப்படத்தைத் தியேட்டரில் மட்டும் மூன்று முறை பார்த்தேன். பின்னர் வீட்டில் இரண்டு முறை பார்த்தேன். நாம எல்லாருமே அவருடைய படங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கோம். இந்தப் படங்கள்தான் நீங்க கேட்டதும் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வர படங்கள்,” எனக் கூறினார்.
த்ரிஷாவின் பதிலுக்கு இடையில் 'தக் லைப்' படத்தை எனக்காக எத்தனை முறை பார்ப்பீங்க, த்ரிஷாவுக்காக எத்தனை முறை பார்ப்பீங்க என த்ரிஷாவிடம் கூடுதல் கேள்வியைக் கேட்டார் கமல்ஹாசன்.