சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
ஹிந்தி டிவி உலகில் 'கபில் சர்மா ஷோ' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி. 2016ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரையில் 5 சீசன்கள் நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கபில் சர்மாவின் நகைச்சுவைப் பேச்சுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது மற்ற பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.
அதே கபில் சர்மா இந்த நிகழ்ச்சியின் சற்றே மாறுதலான வடிவத்தை 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' என்ற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நடத்தி வருகிறார். கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பமான இந்த நிகழ்ச்சி இதுவரையில் 2 சீசன்கள் நடந்துள்ளது. விரைவில் மூன்றாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.
இந்த சீசனுக்காக கபில் சர்மாவுக்கு ஒரு எபிசோடுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஒரு டிவி ஷோவுக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு எபிசோடை எப்படியும் ஒரே நாளில் எடுத்து முடித்துவிடுவார்கள். இப்படியான ஒரு சம்பளம் இந்திய டிவி உலகில் வழங்கப்படுவது ஆச்சரியம்தான்.