விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஹிந்தியில் சைத்தான், ஸ்ரீகாந்த் போன்ற படங்களில் நடித்த ஜோதிகா தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் பிரமோசன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்ற போது சபானா ஆஷ்மியுடன் தானும் கலந்து கொண்டார் ஜோதிகா. அவர்களுடன் நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ள இந்த தொடரை ஹிதேஷ் பாட்டியா இயக்கியுள்ளார்.
இந்த தொடர் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 28 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஒரு காட்சியில் சிகரெட் பிடிப்பது போன்று நடித்துள்ளார் ஜோதிகா. இதுதொடர்பான போட்டோக்களை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஜோதிகாவா இப்படி நடித்துள்ளார் என கருத்து பதிவிட்டுள்ளனர்.