சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் |
இந்தியன் 2 படத்தை அடுத்து ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வந்தபோது அடுத்தபடியாக ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை ரீமேக் செய்யப்போவதாக கூறி வந்தார் இயக்குனர் ஷங்கர். அதற்கான பேச்சுவார்த்தையும் அப்போது நடைபெற்றது. தொடர்ந்து போட்டோஷுட், படம் பற்றிய அறிவிப்பு எல்லாம் வந்தது.
ஆனால் இந்தியன்-2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வி காரணமாக தற்போது ஷங்கர் படத்தில் நடிப்பதில் ரன்வீர் சிங் ஆர்வம் காட்டவில்லையாம். அதன் காரணமாகவே அந்நியன் ரீமேக்கில் நடிக்க கொடுத்திருந்த கால்ஷீட்டை தற்போது டான் 3 என்ற ஹிந்தி படத்திற்கு கொடுத்து நடிக்க தொடங்கிவிட்டாராம். ரன்வீர் சிங்கின் இந்த முடிவு காரணமாக அந்நியன் ஹிந்தி ரீமேக்கை கிடப்பில் போட்டுவிட்டாராம் ஷங்கர். அனேகமாக படம் டிராப் ஆகலாம் என பாலிவுட்டில் பேசி வருகிறார்கள்.