4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் |

பா.விஜய் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து நேற்று முன்தினம் திரைக்கு வந்த படம் 'அகத்தியா'. அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்தனர். பேண்டஸி கலந்த படமாக வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இப்படம் தொடர்பாக ஜீவா அளித்த ஒரு பேட்டியில், "கடந்த ஆண்டு மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தில் மோகன்லாலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க என்ன அணுகினார் லிஜோ. ஆனால், எனக்கு அந்த கேரக்டர் பிடிக்கவில்லை. அதனால் நடிக்க மாட்டேன் என கூறினேன்" என்றார்.
தமிழில் ஜீவாவின் அப்பா ஆர்பி சவுத்ரி தயாரித்த ஜில்லா படத்தில் விஜய் உடன் நடிகர் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல ஜீவா நடித்த அரண் படத்திலும் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




