நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் | அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' பட டீசர்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? | 'மதராஸி' தாமதம்: தயாரிப்பாளர் கோபம்: மீண்டும் நடக்குமா? | மீண்டும் 9 படங்கள் ரிலீஸ் ஆகும் வாரம்… | பழம்பெரும் நடிகை பிந்து கோஷிற்கு உதவிய கேபிஒய் பாலா! |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போஸ். தற்போது அவரது கைவசமாக விஜய் தேவரகொண்டா, சூர்யா, துல்கர் சல்மான், ராம் பொத்தினேனி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரபாஸ் ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் ஹனுமன் பட புகழ் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பிரபாஸ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சூப்பர் ஹீரோ கதையில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. இதில் பாக்யஸ்ரீ போஸ் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகி இருப்பதாக சொல்கிறார்கள்.