இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் |
விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார் . மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடித்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
அவள் வருவாளா, வாலி, உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்களில் அஜித்தும் சிம்ரனும் இணைந்து நடித்தார்கள். இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் என்கிறார்கள்.