என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் | அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' பட டீசர்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? | 'மதராஸி' தாமதம்: தயாரிப்பாளர் கோபம்: மீண்டும் நடக்குமா? | மீண்டும் 9 படங்கள் ரிலீஸ் ஆகும் வாரம்… | பழம்பெரும் நடிகை பிந்து கோஷிற்கு உதவிய கேபிஒய் பாலா! | நடிகராக மீண்டும் வெற்றியைப் பதிப்பாரா ஜிவி பிரகாஷ்குமார்? |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் பிப்., 6ம் தேதி வெளியான படம் ‛விடாமுயற்சி'. ஆக் ஷன் கலந்த கதையில் இப்படம் வெளியானது. அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்தது.
தமிழகம் முழுக்க சுமார் 900 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. ஒரு தரப்பினர் படம் சூப்பர் என்றும், மற்றொரு தரப்பினர் படம் சுமார் என கலவையான விமர்சனங்களை தந்தனர். இருப்பினும் இப்படம் நான்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது.
நான்கு நாட்களில் தமிழகத்தில் ரூ.60 கோடியும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் 10 கோடியும், உலகம் முழுக்க ரூ.30 கோடியும் வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.