நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து 12 ஆண்டுகளாக கிடப்பில் கடந்த மதகஜராஜா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதையடுத்து கிடப்பில் கிடக்கும் மேலும் சில படங்களையும் சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் வெளியிடும் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வைபவ் நாயகனாக நடித்து கடந்த 2023ம் ஆண்டு திரைக்கு வர இருந்த ஆலம்பனா என்ற படம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த படத்தை மார்ச் 7ம் தேதி வெளியிடுவதாக அப்படத்தை தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரி கே.விஜய் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் வைபவ் உடன் பார்வதி நாயர், பால சரவணன், ஆனந்தராஜ், ரோபோ சங்கர் வெளியிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
இதேபோல் விமல் நடித்து கிடப்பில் கிடந்த படவா என்ற படத்தையும் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.