தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுவாகவே வெங்கட் பிரபுவின் ஆதர்ச நடிகர்களாக இருக்கும் பலரும் அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுவார்கள். அந்த வகையில் சரோஜா படத்தின் மூலம் வெங்கட் பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் வைபவ்வும் வழக்கம் போல இந்த கோட் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
பொதுவாகவே வெங்கட் பிரபு தனது படங்களை பற்றி எந்த விபரங்களையும் வெளியிடாமல் அடக்கி வாசித்தாலும் அவரது குழுவைச் சேர்ந்த சில ஆஸ்தான நடிகர்கள் மூலம் படம் பற்றிய ஏதாவது தகவல்கள் எதிர்பாராமல் கசிந்து விடும். அந்த வகையில் சமீபத்திய ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் வைபவ் கோட் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசும்போது, “இந்த படத்தில் விஜய் இரண்டு வித கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் இளம் பருவ விஜய்யுடன் அவரது நண்பராக இணைந்து நடித்துள்ளேன்” என்று இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் விஜய்க்குமான தொடர்பு குறித்து கூறியுள்ளார் வைபவ்.