கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது | தனுஷ் படம் குறித்த கமெண்ட் சும்மா ஒரு தமாஷுக்காக சொன்னது ; கவுதம் மேனன் | 'எம்புரான்' படத்துக்காக 'தொடரும்' பட ரிலீஸை தள்ளிவைத்த மோகன்லால் | இரண்டாம் பாகம் இருக்கு ; ஆவேசம் நடிகர் சொன்ன அப்டேட் | ''எனக்கு மேனேஜரே இல்லை'': சந்தீப் வங்காவுக்கு சாய் பல்லவி பதில் | மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க கவுதம் மேனன் முடிவு ; மோகன்லால், பிரித்விராஜூடன் பேச்சு | சினிமா ஹீரோயின் ஆனார் ஆயிஷா | அதிகாலை காட்சிகள் இல்லாமல் வெளியாகும் 'தண்டேல்' | பிளாஷ்பேக்: மதுவின் தீமையை விளக்கிய முதல் படத்தை துவக்கி வைத்த எம்ஜிஆர் |
மோகன்லால் நடிப்பில் இந்த வருடம் அடுத்தடுத்து படங்கள் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மலையாளத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'எம்புரான்' மற்றும் 'தொடரும்', தெலுங்கில் 'விருஷபா' மற்றும் 'கண்ணப்பா' ஆகிய படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். இதில் தெலுங்கு படங்களில் கண்ணப்பா படத்தில் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட மோகன்லால் நேற்று தான் விருஷபா படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.
அதே சமயம் கடந்த ஜனவரி 30ம் தேதியே மலையாளத்தில் அவர் நடித்திருந்த தொடரும் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் திட்டமிட்டபடி அந்த படம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாற்று திட்டம் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் மோகன்லால்.
அதற்கு பதிலாக வரும் மார்ச் 27ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி எம்புரான் படத்தை ரிலீஸ் செய்ய மோகன்லால் முடிவெடுத்து இருக்கிறாராம். காரணம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன்லால் இயக்கி நடித்த 'பரோஸ்' திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. தொடரும் படம் கூட தருண் மூர்த்தி என்கிற என்கிற அவ்வளவு பிரபலமில்லாத இயக்குனர் இயக்கியுள்ள ஒரு பீல் குட் படமாகத்தான் உருவாகியுள்ளது.
அதற்கு எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியாததால் அதற்கு பதிலாக ஏற்கனவே வெற்றி கூட்டணியான பிரித்விராஜ் டைரக்ஷனில் தான் நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய எம்புரான் படத்தை இந்த வருடத்தில் தனது முதல் படமாக ரிலீஸ் செய்து வெற்றியை ருசிக்க முடிவு செய்துள்ளாராம் மோகன்லால். அதனாலேயே தொடரும் படத்தின் ரிலீஸை மே மாதம் தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.