எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலிஸான படங்கள் மூலம் அழுத்தமான முத்திரை பதித்தவர் கவுதம் மேனன். அவரது படங்கள் ரசிகர்களால் விருப்பப்பட்டாலும் அவர் தயாரிப்பாளராக மாறிய பிறகு அவரது ஒவ்வொரு படமுமே ரொம்பவே தாமதமாகி பல பிரச்னைகளை சந்தித்தே தான் வெளியாகிறது. அந்த வகையில் விக்ரமை வைத்து அதை இயக்கிய 'துருவ நட்சத்திரம்' படம் இன்னும் ஆறு வருடமாக வெளியாக முடியாமல் தவிக்கிறது.
இந்தநிலையில்தான் சமீபத்தில் மலையாளத்தில் முதன்முறையாக நுழைந்த இயக்குனர் கவுதம் மேனன் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்ல, கவுதம் மேனன் இதுவரை இயக்கிய படங்களிலேயே குறுகிய காலத்தில் அந்த பட வேலைகள் முடிந்து ரிலீஸ் ஆனது.
மேலும் மலையாளத்தில் நடிகராகவும் பயணிக்க துவங்கியுள்ள கவுதம் மேனன் அடுத்ததாக மோகன்லால், பிரித்விராஜ் மற்றும் டொவினோ தாமஸ் போன்ற ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்து மலையாளத்திலேயே படம் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழில் பல முன்னணி முன்னணி ஹீரோக்களுடன் அவருக்கு கசப்பான அனுபவமே இருப்பதால் இப்போதைக்கு தமிழில் ஒரு பெரிய ஹீரோவுடன் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு அவருக்கு குறைவு தான். இதனால் மலையாளத்திலேயே இன்னும் கொஞ்ச நாட்கள் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் கவுதம் மேனன்.