அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை ஸ்டைலிஷான பாணியில் இயக்கி வருபவர் இயக்குனர் கவுதம் மேனன். தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்து மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்கிற படத்தை இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக பல சேனல்களுக்கு அவர் பேட்டி கொடுத்து வந்தார். அப்போது அவர் தனுஷை வைத்து இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் குறித்து கேட்டபோது, கிண்டலாக, “எந்த படத்தைப் பற்றி கேட்டீர்கள்? அதில் ஏதோ ஒரு பாடல் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. அது என் படம் அல்ல.. யாரோ ஒருவர் செய்தது” என்று நகைச்சுவையாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.. அதாவது அந்த படத்தில் தனுஷின் குறுக்கீடு மிகப்பெரிய அளவு இருந்தது என்பது தான் அவர் சொல்ல வந்தது.
இந்த நிலையில் சமீபத்திய இன்னொரு பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் கூறும்போது, “எனை நோக்கி பாயும் தோட்டா படம் பற்றி நான் கூறியது சும்மா ஒரு தமாஷுக்காக. என்னுடைய படங்களிலேயே நான் விரும்பியபடி எடுக்க முடியாமல் போன படம் அது மட்டும் தான். கடைசியாக 20 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை வெறும் ஐந்திலிருந்து 10 நாட்களில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது எனக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தான்.. இதுவே வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்து இந்த கருத்தை நான் சொல்லியிருந்தால் அது தவறாக போயிருக்கும். என்னுடைய படம் என்பதால் ஜஸ்ட் லைக் அதை ஒரு ஜாலிக்காக சொன்னேன்” என்று கூறியுள்ளார்.