கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
மலையாள திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர். இதில் சில குணச்சித்திர நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நிகழ்வுகளும் நடைபெற்றன.
இப்படி அடுத்தடுத்து பல நடிகைகள் புகார் கூறியதை தொடர்ந்து இதை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது கேரள அரசு. இந்த குழுவின் விசாரணையில் நடிகை ஒருவர் ஏற்கனவே பிரபல நடிகரும் தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவருமான முகேஷ் மீது கொடுத்திருந்த புகாரை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சிறப்பு விசாரணை குழு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனுடன் இமெயில் மற்றும் வாட்சப் ஆதாரங்கள் போன்றவற்றையும் சில சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே இதே நடிகையின் குற்றச்சாட்டின் பெயரில் தான் முகேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த நிலையில் மீண்டும் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.