மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

'தி கோட்' படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் 'ஜனநாயகன்' என்ற படத்தில் தற்போது நடத்தி வருகிறார் விஜய். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் இது ஒரு கமர்சியல் படம் என்று மட்டுமே படக்குழு கூறி வந்த நிலையில், ஜனநாயகன் என்ற டைட்டில் வெளியானதை அடுத்து இது அரசியல் படம் என்பது தெரிய வந்தது. அதோடு இந்த படம் அரசியல் படமாக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய வகையில் கதையோட்டம் இருக்க வேண்டும். குறிப்பாக யாரையும் நேரடியாக தாக்கும் வகையில் காட்சிகள் இடம் பெறக் கூடாது என்றும் இயக்குனருக்கு ஒரு உத்தரவு போட்டு உள்ளாராம் விஜய்.
மேலும், சமூக நீதி பற்றி பேசும் இந்த படத்தில், நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தக்கூடிய ஒரு புரட்சிகரமான வேடத்தில் விஜய் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான ஒரு படமாகவே இந்த ஜனநாயகன் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.