எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் பலர் நடித்த 'கேம் சேஞ்ஜர்' படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தோல்வியில் முடிந்தது. இப்படத்திற்கான பல நெகட்டிவ் பரப்புரைகள் செய்யப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் தெலுங்கில் இந்த வாரம் வெளியாக உள்ள 'மத கஜ ராஜா' படத்திற்கான நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஞ்சலியிடம் 'கேம் சேஞ்ஜர்' படத்தின் தோல்வி குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அஞ்சலி, “கேம் சேஞ்ஜர்' படம் பற்றி பேச வேண்டுமென்றால் அதற்காக தனியாக பேட்டி ஒன்றை நடத்த வேண்டும். எல்லாருக்கும் அதற்கான காரணம் தெரியும். சில படங்களுக்கு நடிகர்கள், நடிகைகள் தனியாகச் செய்வார்கள். கேம் சேஞ்ஜர் எனக்கு அந்த மாதிரியான ஒரு படம். பலரும் எனது நடிப்பு குறித்து பாராட்டினார்கள். அதுவே எனக்குப் போதுமானது. மற்ற விஷயங்கள் பற்றி பேச வேண்டுமானால் அரை மணி நேரமோ, முக்கால் மணி நேரமோ தனியாகப் பேச வேண்டும்,” என்றார்.
'கேம் சேஞ்ஜர்' படம் அதன் பட்ஜெட்டில் பாதியளவு மட்டுமே வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.