துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
புதுப்பேட்டை, தெறி, விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லன்களுக்கு அடியாள், ரவுடி போன்ற கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் ஜெயசீலன். தெறி படத்தில் குழந்தைகள் ரைம்ஸ் பாட சொல்லும் காட்சிகளில் தவறாக பாடி விஜய்யிடம் அடி வாங்குவது போன்ற காட்சியில் நடித்திருப்பார். 40 வயதாகும் இவர், திருமணம் செய்யாமல் சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நோய் தீவிரமானதை அடுத்து படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.