பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் -2 படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்தபோதும், அதையடுத்து ராம்சரண் நடிப்பில் அவர் இயக்கிய ‛கேம் சேஞ்ஜர்' வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த படமும் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை. அந்த வகையில் இதுவரை இந்த கேம் சேஞ்ஜர் படம் உலக அளவில் 194 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இப்படத்தை தயாரித்த தில்ராஜூவுக்கு 100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் இந்த தோல்வியில் இருந்து மீண்டு விட வேண்டும் என்பதற்காக அடுத்த கட்டமாக இந்தியன் -3 படவேலைகளில் இயக்குனர் ஷங்கர் தற்போது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.