துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
இயக்குனர் பாரதிராஜா '16 வயதினிலே' போன்று உலகத் தரமான படங்களையும் இயக்கி உள்ளார். 'அலைகள் ஓய்வதில்லை' போன்று புரட்சிப் படங்களையும் இயக்கி உள்ளார், 'கிழக்கே போகும் ரயில்' போன்று காதல் படங்கள் இயக்கி உள்ளார். அவருடைய படங்கள் அனைத்தும் பாராட்டுக்களை பெற்றன. ஆனால் 'டிக் டிக் டிக்' படத்திற்கே சர்ச்சைகள் எழுந்தன.
பாரதிராஜாவின் மிக நெருங்கிய நண்பரான ஆர்.சி.பிரகாஷ் என்பவர் ஒரு நாள் அவருடன் பேசிக் கொண்டிருந்த போது "நீ எல்லாம் மண்வாசனை படங்கள் எடுக்கத்தான் லாயக்கு உன்னால் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க முடியுமா" என்று கேட்டார். 'தயாரிக்க நீ ரெடி என்றால் இயக்க நான் ரெடி' என்றார் பாரதிராஜா. இந்த சவாலில் உருவானது தான் 'டிக் டிக் டிக்'.
பாரதிராஜா, ஆங்கில எழுத்தாளரான ஜேம்ஸ் அட்லி ஜெஸ் என்பவரின் தீவிர ரசிகர். அவர் எழுதிய 'டைகர் பைதி டெல்ஸ்' என்ற கதையை தழுவி உருவானதுதான் 'டிக் டிக் டிக்'. அழகிகளான மூன்று பெண்களின் உடலுக்குள் வைத்து வைரத்தை கடத்தும் கதை. இந்தப் படத்தில் அந்த அழகிகளாக மாதவி, ராதா, ஸ்வப்னா நடித்தார்கள். இதனை கண்டுபிடிக்கும் போட்டோகிராபராக கமல் நடித்திருந்தார்.
முதலில் இந்த படத்தின் டைட்டிலுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது ஏற்பட்டது. 3 நாயகிகளும் நீச்சல் அணிந்து இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. சட்டசபையில் கூட இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சென்சாரிலும் ஏகப்பட்ட கேள்விகள்.
படம் வெளிவந்த பிறகு கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அன்றைய மீடியாக்கள் பாரதிராஜாவை திட்டியிருந்தாலும். படம் வெற்றி பெற்று நல்ல வசூலை கொடுத்தது. பின்னர் இந்த படம் இந்தியில் 'கரிஷ்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஐ.வி. சசி இயக்கினார். கமலுடன் ரீனா ராய், தீனா அம்பானி நடித்தனர்.