மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் | 21ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் | ஆன்லைன் சூதாட்ட வழக்கு: ஊர்வசிக்கு சம்மன் | பிளாஷ்பேக்: சத்யராஜை ஹீரோவாக்கிய 'சாவி' | பிளாஷ்பேக்: தமிழில் சினிமாவான தெலுங்கு நாடகம் | ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம் | முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா | கேரளாவில் 'காந்தாரா 2' வெளியீடு சிக்கல் சுமூகமாக தீர்ந்தது | தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர் |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், இன்றைய தென்னிந்திய பிரம்மாண்டப் படங்களுக்கான முன்னோடியாக இருந்தவர். அவரைப் பார்த்துதான் பிரம்மாண்டமான படங்களை எடுக்கிறேன் என இயக்குனர் ராஜமவுலி கூட கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்து அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கடந்த வருடம் தமிழில் வெளியான 'இந்தியன் 2' படமும், கடந்த வாரம் தெலுங்கில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படமும் அவருக்கு தோல்விப் படங்களாக அமைந்துள்ளன. தொடர்ந்து தோல்விகளையே தராத ஷங்கர் அடுத்தடுத்து தோல்விகளைக் கொடுத்திருப்பது திரையுலகினரிடமும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் அடுத்து 'இந்தியன் 3' படம்தான் வெளிவர வேண்டும். அப்படத்திற்கான வேலைகளை 'கேம் சேஞ்ஜர்' வெளியீட்டிற்குப் பிறகு ஆரம்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. அந்தப் படத்தை வெற்றிப் படமாகக் கொடுப்பதன் மூலம்தான் ஷங்கர் மீண்டு வர வேண்டும். அப்போதுதான் அவரை நம்பி அடுத்து தயாரிப்பாளர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.