ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது. படத்தின் பட்ஜெட்டை ஷங்கர் அதிகமாக்கிவிட்டார் என்ற குற்றச்சாட்டுடன் அவர் மீது 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்கப் போகக் கூடாது என லைக்கா நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அது தற்போது நடந்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி மத்தியஸ்தம் செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பானுமதியை நீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே, சமீபத்தில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் சென்னை வந்துள்ளார். அவரை இயக்குனர் ஷங்கர் நேரில் சென்று சந்தித்துள்ளார். நடந்த விவகாரங்களைப் பற்றி இருவரும் பேசியதாகத் தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே சுமூக உடன்பாடும் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, விரைவில் ஷங்கர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்க ஷங்கர் தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் கூட இந்த விவகாரம் குறித்து கமல்ஹாசன் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டே ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை இயக்கி முடிப்பார் என்றும், கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு முடிந்ததும் அவரும் வந்து இப்படத்தில் கலந்து கொள்வார் என்றும் தெரிகிறது.