துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
கடந்த 2023ம் ஆண்டு நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் மட்டுமே ஓடிடியில் வெளியானது. அவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியட் ஸ்டூடண்ட்ஸ், டாக்ஸிக், ராக்காயி என பல படங்கள் உள்ளன. இதில் மாதவன், சித்தார்த்துடன் இணைந்து அவர் நடித்திருக்கும் டெஸ்ட் என்ற படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இம்மாதம் இறுதியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.