தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
நடிகர் விஜய் தற்போது வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷின் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவர் ஆண்டனி உடன் கலந்து கொண்டார். இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ, கதிர் ஆகியோரும் கலந்து கொண்டு உள்ளார்கள்.
இந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு விஜய் காரில் இருந்து இறங்கி வந்தது தொடங்கி, பொங்கல் கொண்டாடும்போது இடம் பெற்ற காட்சிகளின் வீடியோவை ஜெகதீஷ் பழனிச்சாமி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது .