ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்ஜர் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியன் 3, வேள்பாரி போன்ற படங்களை அவர் இயக்குவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பயோபிக் படம் என்றால் யாருடைய வாழ்க்கை வரலாறை நீங்கள் படமாக்குவீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இதுவரை எனக்கு யாருடைய வாழ்க்கை வரலாறு படத்தையும் இயக்க வேண்டும் என்ற யோசனை வந்ததில்லை. ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ரஜினி சாரின் பயோபிக் படத்தைதான் இயக்குவேன். அவரைப் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரியும். என்றாலும், ரசிகர்களுக்கு தெரியாத பல அரிய தகவல்களையும் அந்த படத்தில் சொல்ல வேண்டும் . ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த எந்த ஐடியாவும் இல்லை. அது குறித்து சூழ்நிலை அமையும்போது தான் யோசிப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஷங்கர்.