துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின் வாங்கியதால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் அவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக ஏப்ரல் பத்தாம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தின் டிரைலர் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில், அந்த டிரைலரில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், விடாமுயற்சி படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ள நிலையில், 2 மணி நேரம் 30 நிமிடங்கள், 34 வினாடி ரன்னிங் டைம் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அனேகமாக படம் ஜன., 23 அல்லது ஜன., 30ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.